» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் விழுந்த மாட்டை மீட்க முயன்ற பெண் பலி : மாடு உயிருடன் மீட்பு

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:08:38 PM (IST)

களக்காடு அருகே கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்ற சென்ற பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

களக்காடு அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் மனைவி சுப்பம்மாள் (55), இவர் ஏர்வாடியில் உள்ள பள்ளியில் சத்துணவு சமையலராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை மாட்டை மேய்ச்ச லுக்காக நம்பிதலைவன் பட்டையம் பகுதிக்கு கொண்டு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது மாடு வேகமாக ஓடி அங்கிருந்த கிணற்றில் விழுந்தது. இதைப்பார்த்த சுப்பம்மாள் மாட்டை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால் அவரால் மாட்டை காப்பாற்ற முடியாமல் நீரில் மூழ்கி பலியானார். மாடு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதையடுத்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாட்டை உயிருடன் மீட்டனர். நீரில் மூழ்கி பலியான சுப்பம்மாளின் உடலையும் மீட்டனர். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory