» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடரும் : தென்காசி ஆட்சியர் தகவல்

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:33:54 PM (IST)

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடருகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது.

பருவ மாற்றம்; காரணமாக, சாதாரண சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம், மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, மலேரியா, எலிக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவக்கூடும். இக்கால கட்டங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், கிளிந்த டயர்கள், ஆட்டு உரல், தேங்காய் ஒடுகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் 30.08.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி, தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற  சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கு  தொடர்ந்து தடை அமலில் இருக்கும். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory