» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீகேபுதூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:42:06 PM (IST)



வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் உதவி ஆட்சியர் மனுக்களை பெற்றார்.

கொரோனா பரவல் இருப்பதால் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
அதன்படி வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மரகதநாதன் தலைமையில் நடந்தது. வீகேபுதூர் தாசில்தார் முருகு செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள், தலைமையிடத்து துணை தாசில்தார் சுடலைமணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். ‌ 

இதில் சுரண்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் சுரண்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும், நல்லசமாரியன் கிளப் மற்றும் ஓய்எம்சிஏ சார்பில் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க வேண்டும், சுரண்டை சேர்ந்தமரம் ரோட்டை இன்னும் அகலப்படுத்த வேண்டும், எனவும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை பெறுதல் தொடர்பாக மொத்தம் 21 மனுக்கள் வரப்பெற்றதாகவும் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதே போன்று ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும் எனவும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம். என உதவி ஆட்சியர் மரகதநாதன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory