» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு

வியாழன் 24, செப்டம்பர் 2020 8:05:20 PM (IST)

தேவர்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை காவல்துறையினர் உதவியுடன் மீட்பு துறையினர் மீட்டனர். 

ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து(20), மற்றும் அவர்களது நண்பர்கள் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியில் ஒவ்வொரு ஊராக சென்று சுத்தம் செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் இன்று லொச்சிப்பட்டி கிராமத்திற்கு வந்த இவர்கள் தனித்தனியாக பிரிந்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து வந்தனர். 

அப்போது காளிமுத்து என்பவர் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுதுள்ளார். சிறிது நேரம் கழித்து கிணற்றின் உரிமையாளர் கிணற்றை வந்து பார்வையிட்டு போது யாரோ கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக தேவர்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

தகவல் அறிந்து உடனடியாக உதவி ஆய்வாளர் மூனிஸ் தலைமையில் காவலர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது காளிமுத்து உயிருடன் இருப்பது தெரிய வந்தது. பின்பு உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வந்த மீட்பு துறையினர், காவல்துறையினர் உதவியுடன் காளிமுத்துவை மீட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory