» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாட்ஸ் அப் மற்றும் இமெயில் மூலம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதி : தென்காசி ஆட்சியர்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 10:44:41 AM (IST)

பொதுமக்கள் வாட்ஸ் அப் மற்றும் இமெயில் மூலமாக புகார்களை தெரிவிக்கலாம் என தென்காசி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புகார் மனுக்களை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் அளவிலான ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பெறப்படும் மனுக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் துணை ஆட்சியாளர்களால்  வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

வரும் 28.09.2020 அன்று சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துணை ஆட்சியர்களுடன் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்வார். மேலும் சிவகிரி தாலுகாவில் வைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக்கொள்வார்.

இதன்மூலம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து திங்கட்கிழமை மனு அளிப்பதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில் திங்கள்கிழமை சென்று மனுக்களை அளிக்கவேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் எனவும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையவழியினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9443620761 என்ற அலைபேசி எண்ணில் வாட்ஸ்அப்  மூலமாகவும், collector.grievance@gmail.com என்ற இமெயில் மூலமாகவும், மேலும் https://gdp.tn.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory