» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மேலநீலிந்தநல்லூரில் ரூ.7.92 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் : அமைச்சர் ராஜலெட்சுமி அடிக்கல்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 11:10:43 AM (IST)


 
மேலநீலிந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.92 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் மேலநீலிந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்னகோவிலான்குளம் கிராமத்தில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து பைப் லைன் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பணிகளுக்கு ரூ.43.74இலட்சம் மதிப்பிலும். ஈச்சந்தா ஊராட்சியில் ஆண்டார்குளம், பெரியசாமியாபுரம், பெருமாள் பட்டி, பூவலிங்கபுரம், உத்தான்குளம் மற்றும் ஈச்சந்தா ஆகிய 6 குக்கிராமங்களில் புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்றம் செய்து மற்றும் பைப்லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஈச்சந்தா ஊராட்சியில் ரூ.2.70 கோடியே மதிப்பிலான குடிநீர் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.  

இலந்தைகுளம் ஊராட்சியில்  கருத்தானூர் மற்றும் இலந்தைகுளம் ஆகிய குக்கிராமத்திற்கு ரூ.52.62 இலட்சம் மதிப்பிலும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, தரை மட்ட நீர் தேக்கத்தொட்டி, ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்றம் செய்து மற்றும் பைப்லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக இலந்தைகுளம் ஊராட்சியில் ரூ.52.62 இலட்சம் மதிப்பிலான புதிய குடிநீர் திட்ட பணிகளுக்கும் உட்பட மொத்தம் 6 ஊராட்சிகளுக்கு ரூ. 7.92 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டபணிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்; திருமலை முருகன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் ஜான்சன், முருகேசன், முக்கிய பிரமுகர்கள் கண்ணன் (எ) ராஜீ, ரமேஷ், வேல்சாமி, வேல்முருகன், ஆறுமுகம், உட்பட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory