» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்ப தகராறில் வயதான தம்பதிகள் தற்கொலை! உடல்கள் காட்டுப்பகுதியில் மீட்பு!!

வெள்ளி 25, செப்டம்பர் 2020 12:17:05 PM (IST)

நாங்குநேரி அருகே குடும்பத்தகராறில் வயதான தம்பதிகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இளம்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கன் (70) இவரது மனைவி செல்வமணி (64) கூலி தொழிலாளியான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் கூட்டுக்குடும்பமாக ஓரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது இரண்டாவது மகன் ராஜதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனிடையே இரண்டாவது மருமகளுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமையும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதனால் வயதான தம்பதிகள் இருவரும் அன்றையதினம் வீட்டை வெளியில் சென்றவர்கள் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற் ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வயதான தம்பதிகள் இறந்த நிலையில் கிடப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் வந்து, இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் சபாபதி தலைமையில் போலீசார் விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த உடல்கள்,  மூக்கன் மற்றும் அவரது மனைவி செல்வமணி என்பது தெரியவந்தது. அவர்களின் உடலின் அருகிலேயே விஷ மருந்து பாட்டிலும் கிடந்துள்ளது. பின்னர் கைப்பற்றிய உடல்களை உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் வயதான தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory