» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வரும் ஆக.1ஆம் தேதி சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 25, செப்டம்பர் 2020 1:28:06 PM (IST)

சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாமில் தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினர்களான கிறித்துவர், இசுலாமியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுப்படுத்தயும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில்  தனிநபர் கடன், சிறுவணிகக் கடன், கல்விக் கடன், கறவை மாட்டுக் கடன் மற்றும் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. 

கடன் கோருபவருக்கான தகுதிகள்
இஸ்லாமியர் கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பை சேர்ச்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் உதவி திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி/நகர கூட்டுறவு வங்கி/தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

தனிநபர் கடன் திட்டம்-ஐ-ன் கீழ் ரூ.20.00 இலட்சம் வரையிலும் திட்டம்-II-ன் கீழ் ரூ.30.00 இலட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டம் -I-க்கானஆண்டு வட்டி விகிதம் ஆண்/பெண் 6% சதவீதம். திட்டம்-II-க்கான ஆண்டு வட்டி விகிதம் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% ஆகும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் திட்டம்-I-ன் கீழ் சுய உதவிக்குழு ஆண்/பெண் உறுப்பினர் ஒவ்வொருக்கும் அதிகபட்சமாக ரூ.50,000- வரையும் திட்டம்-II-ன் கீழ் அதிகபட்சமாக ரூ.1,50,000- வரையும் கடன் வழங்கப்படுகிறது. 

திட்டம்-ஐ-க்கு வட்டி விகிதம் 7% வரை (ஆண்டிற்கு). திட்டம்-II ஆண்டு வட்டி விகிதம் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% ஆகும். கல்விக்கடன் திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி/வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் பயிலும் மாணவஃமாணவியர்களுக்கு ஆண்டிற்கு ரூ.4,00,000- வீதம் அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரை திட்டம்-I மற்றும் திட்டம்-II-ல் வழங்கப்படுகிறது.  

திட்டம்-I-க்கு ஆண்டு வட்டி விகிதம் 3% ஆகும்.  திட்டம்-II-ற்கு ஆண்டு வட்டி விகிதம் மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5% ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98,000ஃ-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வங்கி விதிகளின்படி கடன் தொகைக்கான பிணையம் தேவைப்படின் அளிக்கப்பட வேண்டும்.

இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவுப்படுத்திக் கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக வருகின்ற 01.10.2020 அன்று காலை 11.00 மணியளவில், உடையார்பட்டி வடக்கு பால பாக்யா நகர், சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள வானவில் திருமண மண்டபத்தில் வைத்து கடன் கோரும் விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம் (Loan mela) நடைபெற உள்ளது.

இம்முகாமில் மேற்படி கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், கல்விக்கடனுக்கான பள்ளி சான்றிதழ் நகல் (Bonafide certificate), கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக்கோரும் இதர ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory