» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாய மசோதாவிற்கு எதிரான போராட்டம் : தென்காசி மாவட்டத்தில் 467 பேர் கைது!

வெள்ளி 25, செப்டம்பர் 2020 1:39:24 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டம் செய்த 55 பெண்கள் உட்பட 467 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாவிற்கு எதிராக தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில் சிபிஐ கட்சியின் சார்பாக தலைமையில் நகரச் செயலாளர் அயூப்கான் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேர் மற்றும் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே சிபிஎம் கட்சியின் புறநகர் செயலாளர் பரமசிவம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல, ஆலங்குளம் காவல் நிலைய பகுதியான காமராஜர் சிலை அருகே சிபிஎம் கட்சியின் உறுப்பினர்கள் புறநகர் உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியின் புறநகர் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர், T.N. புதுக்குடி காமராஜர் சிலை அருகே சிபிஐ மற்றும் சிபிஎம்  கட்சியின் புறநகர் செயலாளர் வேலூர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர்கள்  உட்பட 467 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory