» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உரங்கள் வாங்கும் போது விவசாயிகள் பெயரிலேயே பில் போட வேண்டும் : தென்காசி ஆட்சியர்

சனி 26, செப்டம்பர் 2020 6:04:11 PM (IST)

உரக்கடைகளில் உரங்கள் வாங்கும் விவசாயிகள் பெயரிலேயே பில் போட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி தொடங்க இருப்பதால் பயிர் சாகுபடி  இடு பொருளான விதைகள் மற்றும் உரங்கள் கூட்டுறவு சங்கங்கள் தனியார் உரக்கடைகள் மற்றும் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவில்; இருப்பில் உள்ளது. அனைத்து உர விற்பனையாளர்களும் தங்கள் கடையின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் உள்ளடக்கிய விலைப்பட்டியலை விற்பனை மையங்களுக்கு வெளியே விவசாயிகளுக்கு தெரியும் படியாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் புத்தக இருப்பு, உண்மை இருப்பு மற்றும் பில்போடும் இயந்திரத்தில்  (POS) காட்டும் இருப்பு ஆகியவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி ஒரே அளவாக இருக்க வேண்டும்.  மேலும் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறாமல் உரம் வாங்கும் விவசாயிகளின் கைவிரல் ரேகையை வைத்து ஆதார் எண்ணை பதிவு செய்து, எந்திரத்தில் பில்போட்டு உரம் வழங்கும் நடைமுறையினை பின்பற்றி உர விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் உரம் வாங்குபவர்கள் எந்திரத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டி இருப்பதால் கொரானா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.  

விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானியத்தில் வரும் உரங்களை விற்பனை செய்ய கூடாது எனவும், உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory