» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நீர்யேற்றும் நிலையத்தினை அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

சனி 26, செப்டம்பர் 2020 7:21:46 PM (IST)


 
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நீர்யேற்றும் நிலையத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில்,புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கள் நகராட்சிக்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நீர்யேற்றும் நிலையத்தினை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் இன்று (26.09.2020) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பினன்ர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் புளியங்குடி நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரூ.543.20 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள் மற்றும் திருவேங்கடம் பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் மதிப்பீட்டுத் தொகை ரூ.302.86 கோடியாகும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் தற்போதைய (2017) இடைகால (2032) மற்றும் உச்சகட்ட (2047) மக்கள்  தொகை முறையே 435,5,18 மற்றும் 6.21 இலட்சம் ஆகும்.இடைக்கால மற்றும் உச்சகட்ட தினசரி குடிநீர் முறையே 46.06 மற்றும் 61.98 மில்லியன் லிட்டர் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் நகராட்சிக்கான விகிதாச்சார திட்ட மதிப்பீடு ரூ.51.79 கோடியாகும். இத்திட்டத்தின் மூலம் 63000 மக்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தின் கீழ் புளியங்குடி நகராட்சிக்கான விகிதாச்சார திட்ட மதிப்பீடு ரூ.84.45 கோடியாகும். இத்திட்டத்தின் மூலம் 72000 மக்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தின் கீழ் திருவேங்கடம் பேரூராட்சிக்கான விகிதாச்சார திட்ட மதப்பீடு ரூ.12.50 கோடியாகும். இத்திட்டத்தின் மூலம் 9150 மக்கள் பயன்பெறுவார்கள்.

இக்கூட்டுக் குடிநீர் இத்திட்டத்தில் தென்காசி மாவட்ட உள்ளாட்சி அமைப்பின் பங்களிப்பின் ரூ.210.58 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் முழுமையாக 31.12.2020 க்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், திருநெல்வேலி சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரியதர்ஷினி, செய்தி மக்கள தொடர்பு அலுவலர் செந்தில், திருநெல்வேலி வட்டாச்சியர் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory