» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காய்கறி விவசாயிகளுக்கு ஊக்க தொகை : தென்காசி மாவட்ட மக்கள் பயன்பெறலாம்

சனி 26, செப்டம்பர் 2020 7:46:07 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட தோட்டக் கலை  துணை இயக்குநர் ஜெயபாரதிமாலதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க எக்கருக்கு ரூ.2500ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக தென்காசிமாவட்டத்தில் 27.50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வெங்காயம், தக்காளி, கீரைவகைகள், முருங்கை, வெண்டை, கத்திரி, அவரை மற்றும் பந்தல் வகைகாய்கறி சாகுபடி செய்து வரும் விவசாயிகள் யாவரும் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும், நீர்வள நிலவளத்திட்டத்தில் சிற்றாறு, கீழ்தாமிரபரணி மற்றும் கடனாநதி உபவடி நிலப்பகுதிகளில் காய்கறிசாகுபடியை ஊக்குவிக்க ஊக்கத் தொகை வழங்கிட 400ஹெக்டேருக்கு மொத்தமாக10.00 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது புகைப்படம், ஆதார்கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், கம்ப்யூட்டர் பட்டா, வி.ஏ.ஓ.அடங்கல், வங்கிபுத்தக நகல், காய்கறி பயிரிட்ட தோட்டத்தின் புகைப்படம், காய்கறி விதை அல்லது நாற்று வாங்கிய ரசீது ஆகிய ஆவணங்களை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துணை இயக்குநர் ஜெயபாரதிமாலதி கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory