» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

வியாழன் 15, அக்டோபர் 2020 5:45:52 PM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி பெருமாள்புரத்தில் உள்ள  பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 89வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலாம் உருவ படத்திற்கு, ஆசிரியர், ஆசிரியைகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து

Mass kathirOct 15, 2020 - 10:00:26 PM | Posted IP 162.1*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory