» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!!

வெள்ளி 16, அக்டோபர் 2020 8:05:50 AM (IST)

தூத்துக்குடி 35-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய்களை ரோடு ஓரத்தில் மாற்றி அமைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி 35-வது வார்டுக்கு உட்பட்ட மில்லர்புரம், சின்னமணி நகர், சிலோன் காலனி, ராஜீவ் நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, 3வது மைல், தபால் தந்தி காலனி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரோடுகள் மற்றும் மின்கம்பங்கள், நடை பாதைகள், அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால் மெயின் ரோட்டில் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களும் அடிக்கடி உடைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமப் படுகின்றனர். 

எனவே மெயின் ரோட்டில் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மெயின் ரோட்டின் ஓரங்களில் மாற்றி அமைக்க வேண்டும்.  மேலும் 3 இன்ச் அளவு உள்ள குடிநீர் மெயின் குழாயை 4 இன்ஞ் அளவு குழாயாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து

தூத்துக்குடி ஏரியா காரன்Oct 16, 2020 - 09:32:10 AM | Posted IP 108.1*****

மாநகராட்சியின் தேவையில்லாத பாதாள சாக்கடை திட்டத்தால் கொஞ்ச நாள்ல மாநகராட்சியின் அலட்சியத்தால் குடிநீரில் சாக்கடை கலந்து தான் வரும். ஊரெல்லாம் நாறடிக்கும்.. இப்போ புரியாது போக போக புரியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory