» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி சிறையில் நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு

வெள்ளி 16, அக்டோபர் 2020 8:13:18 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் ஆகியோரை அவர்களுடைய குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்களில் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி நேற்று கைதிகளை குடும்பத்தினர் உரிய ஆதாரங்களை காண்பித்து பார்த்து சென்றனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க மிடுக்காக சேலை அணிந்த பெண் ஒருவர், சிறை வளாகத்திற்கு வந்தார். அவரிடம் சிறைக்காவலர்கள் எதற்காக வந்துள்ளீர்கள்? என்று விசாரித்தனர். 

அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதியின் பெயரை குறிப்பிட்டு, அவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவரிடம் நீங்கள் யார்? என்று கேட்டதற்கு சி.பி.ஐ. அதிகாரி என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறைக் காவலர்கள் உடனடியாக சிறை உயர் அதிகாரிகளுக்கும், பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் சிறை உயர் அதிகாரிகள் அந்த பெண்ணை சந்தித்து பேசினர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை போலீசார் பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உறவினர்களை வரவழைத்த போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி, அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி நுழைய முயன்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory