» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் 6 வயது சிறுவன் சாதனை முயற்சி

வெள்ளி 16, அக்டோபர் 2020 8:48:00 AM (IST)

தூத்துக்குடியில் 2 மணி நேரத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த, 6 வயது சிறுவனின் சாதனை  முயற்சியை பொதுமக்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி 3-வது மைல் புதுக்குடியை சேர்ந்தவர் மருதம்பெருமாள். மாற்றுத்திறனாளி. இவருடைய மகன் சுதன் (6). இவன் சிறுவயது முதல் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வத்துடன் இருந்தான். இதனால் மருதம்பெருமாள் தனது மகனை அதில் சாதனை படைக்க தயார்படுத்தினார். கடந்த 4 மாதங்களாக சுதன் தீவிர பயிற்சி மேற்கொண்டான். பயிற்சியாளர் லட்சுமண மூர்த்தி பயிற்சி அளித்தார்.

இதையடுத்து நேற்று சாதனை முயற்சியாக புதுக்கோட்டையில் இருந்து சுதன் ஓட்டத்தை தொடங்கினான். தொடர்ந்து தூத்துக்குடி பீச் ரோடு பனிமயமாதா கோவில் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் ஓடினான். அவன் 2 மணி நேரத்தில் அந்த தூரத்தை கடந்து உள்ளான். இதையடுத்து அந்த சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து

RajaOct 16, 2020 - 05:12:25 PM | Posted IP 173.2*****

Congratulations gods child.. Parents and Coach

M.PERUMALOct 16, 2020 - 02:23:50 PM | Posted IP 162.1*****

valthukkal brother

ManianOct 16, 2020 - 02:18:13 PM | Posted IP 162.1*****

Congratulations junior marathon.

KARNARAJ RAMANATHANOct 16, 2020 - 11:24:33 AM | Posted IP 162.1*****

VAALTHTHUKKAL MELUM MELUM VALARA. VAALHA VALAMUDAN

KalairajanOct 16, 2020 - 10:16:45 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் தம்பி

ஆசீர். விOct 16, 2020 - 09:48:26 AM | Posted IP 108.1*****

Congratulations Maruthaperumal and your son

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory