» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிராமபுற வேலைவாய்ப்பு குறித்து கலந்துரையாடல் : தென்காசியில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு

வெள்ளி 16, அக்டோபர் 2020 8:11:40 PM (IST)மென்பொருள் கட்டுமான நிறுவனத்தினை கிராமபுறங்களில் நிறுவி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி  தென்காசி ஷோகோ மென்பொருள் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறை அருகில்  ஷோகோ மென்பொருள் கட்டுமான நிறுவனத்தில் மென்பொருள் கட்டுமான நிறுவனத்தினை கிராமபுறங்களில் நிறுவி கிராமபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, ஷோகோ  மென்பொருள்  நிறுவனர்  ஸ்ரீதர் வேம்பு முன்னிலையில்   நடைபெற்றது.

தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்,சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வாசுதேவநல்லூர் மனோகரன், மதுரை தெற்கு டாக்டர் சரவணன் ஆகியோர் கலந்துரையாடலின் போது உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது மென்பொருள் கட்டுமான நிறுவனரை சந்தித்து தமிழகத்தில் கிராமபுறங்கள் மென்பொருள் கட்டுமானங்களை நிறுவி கிராமபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டுமென கேட்டுகொண்டார். மேலும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து ஷோகோ மென்பொருள் கட்டுமான நிறுவனங்கள் பெருநகரங்களில் இருந்து கிராமபுறங்களை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களை தேர்வு செய்து கிராமபுற  இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான பயிற்சி அளித்து திறமையானவர்களாக உருவாக்கி மென்பொருள் கட்டுமான துறையில் பணியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகளவில்  மென்பொருள் கட்டுமான துறையில் பணிபுரிவோர் பல்வேறு கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை மாறாமல் மென்பொருள் கட்டுமான துறையில் வெற்றி பெருவதற்காக தமிழ அரசுடன் இணைந்து கிராமபுறங்களில் இளைஞர்களுக்கு மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, திட்ட இயக்குநர் சரவணன்,  தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர்கள் கார்த்திக்குமார், சின்னத்துரை பாண்டியன், ஆவின் ரமேஷ், ஆறுமுகம்,  தென்காசி ஒன்றிய அதிமுக செயலாளர் சங்கரபாண்டியன, நகர செயலாளர் சுடலை,  அமல்ராஜ்,  குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன், இலஞ்சி மயில்வேலன், முத்தராஜன், கந்தசாமி பாண்டியன், வாசுதேவநல்லூர் மூர்த்திபாண்டியன், வெங்கடடேசன் உட்பட அலுவலர்கள், ஷோகோ நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory