» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை: போலீசார் விசாரணை

சனி 17, அக்டோபர் 2020 8:17:42 AM (IST)

நெல்லை அருகே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 வழிச்சாலையில் கங்கைகொண்டான் பகுதியில் ஒரு மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் நேற்று ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து வந்து, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர், அதன்பிறகு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அவர் மேம்பாலத்தில் கயிற்றை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory