» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்; டிரைவர் கைது

ஞாயிறு 18, அக்டோபர் 2020 9:16:44 AM (IST)

பேட்டையில் மினி லாரியில்  கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். 

திருநெல்வேலி பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று பேட்டை இணைப்பு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பேட்டையில் இருந்து பழைய பேட்டை நோக்கி சென்ற மினி லாரியை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். 

அதில், மூட்டைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினி லாரி டிரைவரான பேட்டை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மந்திரமூர்த்தியை (வயது 23) போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory