» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புதுவாழ்வு சங்கம் சார்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

ஞாயிறு 15, நவம்பர் 2020 9:21:38 PM (IST)நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் குருகாட்டூர் கிராம பஞ்சாயத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றுவதை சகோ.மோகன் சி.லாசரஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி கிராமத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் புது வாழ்வு சங்கம் இயங்கி வருகிறது. புது வாழ்வு சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பூர் அருகிலுள்ள குருகாட்டூர் கிராம பஞ்சாயத் தில் சீமைக்கருவேலமரங்கள் அகற்றும்பணி துவக்க விழா நடைபெற்றது. 

விழாவிற்கு புதுவாழ்வுச் சங்க செயலாளர் டாக்டர் அன்புராஜன் தலைமை  வகித்தார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மனும், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான விஜயகுமார், குருகாட்டூர் கிராமபஞ்சாயத்து தலைவர் ஜேனட் புஷ்பராணி, துணைத் தலைவர் ராஜகுமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தானியேல், குருகாட்ரூர் தூய பால்ஸ் சர்ச் பொறுப்பாளர் ஜாண், ஊர் நாட்டாமை ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருகாட்டூர் சேகரத் தலைவர் வெஸ்லி ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். 

குருகாட்டூர் கிராம பஞ்சாயத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை சகோ.மோகன் சி.லாசரஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், சீமைக் கருவேலமரங்கள் அகற்றப்பட்டால் நீர் ஆதாரத்தை, நிலத்தின் வளங்களை பாதுகாக்க முடியும் என்பதினால் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற புது வாழ்வு சங்கம் மூலம் முடிவு செய்து முதலாவதாக ஆழ்வார்திருநகரி ஒராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருகாட்டூர் கிராம பஞ்சாயத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் இப்பணியை துவக்கியுள்ளோம். இதனை அகற்றினால் மட்டும் போதாது குறைந்தது 3 வருடங்களாவது மீண்டும் சீமைக்கருவேல மரம் முளைக்காதவாறு பாதுகாக்கவேண்டும் என்று விவசாயசங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். 3 ஆண்டுகள் அல்ல 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக சீமைக்கருவேல மரங்கள் முளைக்காதவாறு நிலத்தை பாதுகாப்போம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடம்பாகுளத்தை தூர் வாருவது குறித்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டோம். இதனை தூர்வார திட்டமிட்டு அதற்கான அனுமதியையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மூலமாகபெற ஏற்பாடுகள் செய்தோம். ஆனால் நாம் திட்டமிட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை கடம்பாகுளத்தில் தண்ணீர்வற்றவே இல்லை. தொடர்ந்து தண்ணீர் இருந்து வருகிறது.தண்ணீர் வற்றினால்தான் குளத்தை ஆழப்படுத்த முடியும் என்ப தினால் அதற்காக அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்துபேசி அவர்களது அனுமதியு டன் விவசாய சங்க பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் கடம்பாகுளத்தை ஆழப்படுத்த திட்மிட்டு வருகிறோம். அதை நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், புது வாழ்வுச் சங்க ஏரியா பொறுப்பாளர் கெயின் வெஸ்லி,அதிமுக பிரமுகர்கள் சுதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

estherNov 19, 2020 - 11:53:40 AM | Posted IP 108.1*****

very good work superb

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory