» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காணொலி வாயிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

செவ்வாய் 17, நவம்பர் 2020 5:03:58 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 20.11.2020 காணொளி காட்சி வாயிலான நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு, விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, விவசாயிகள் குறைதீர்க்கும்; கூட்டம் வருகிற 20.11.2020 அன்று தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப உதவியுடன் கூடிய காணொளி காட்சி வாயிலாக நடத்தப்படவுள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள், வருகின்ற 20.11.2020 வெள்ளிக்கிழமையன்று காலை 11.00 மணி முதல் 01.00 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களை காணொளி காட்சி வாயிலாக சந்தித்து தங்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை கூறி உரிய பயனடைய இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த  விவசாய பெருமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்ஃவேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை காணொளி வாயிலாக சந்தித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான முன் ஏற்பாடாக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்ஃவேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, விவசாய பெருமக்கள் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory