» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

புதன் 18, நவம்பர் 2020 3:42:15 PM (IST)

சிவகிரியில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராஜா (20) என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து, கடந்த 27.09.2020ல் திருமணம் செய்துள்ளார். சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சமூக நல விரிவாக்க நல அலுவலர் குருபாக்கியம் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் கோவிந்தன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி அந்நபரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory