» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாநகராட்சி அலட்சியத்தால் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது : தூத்துக்குடியில் மக்கள் அவதி!

வியாழன் 19, நவம்பர் 2020 10:35:53 AM (IST)தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தின் திட்டமிடாத நடவடிக்கைகளால் நீதிமன்ற குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் பெருமாள்புரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

தூத்துக்குடியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், ஆங்காங்கே ராட்சத மோட்டாா்கள் வைத்து மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி நீதிபதிகள் குடியிருப்பு, நீதிமன்ற வளாகம் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத மோடடார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் விடப்படுகிறது. 

இதனால் மழைநீர் கழிவுநீரோடு கலந்து பெருமாள்புரம், சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. கழிவு நீர் வீடுகளுக்குள் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் சரியான திட்டமிடல் இன்றி செயல்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனை வெளியேற்ற லட்சக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள திருச்செந்தூர் ரோட்டில் மழைநீா் வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அந்த சாலையில் பாதியளவே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அருகில் உள்ள பெருமாள் புரம் சாலைகள் வழியாக வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், பெருமாள்புரம் பகுதியில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கருத்து

a.isuNov 21, 2020 - 07:13:34 PM | Posted IP 173.2*****

super eppadi ponal valangidum

உதய்Nov 21, 2020 - 12:05:35 PM | Posted IP 108.1*****

மாநகராட்சி செயல் படுமோசம் அதிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் செயல் அரசு அதிகாரிகளை விட மிகவும் கேவளம்

C. Maniraj.Nov 20, 2020 - 06:05:21 PM | Posted IP 108.1*****

Those houses built 20 years ago in Tuticorin with the norms of keeping the basement level of 3 feet above the then road level, are now are now one foot below the present road level. The reason is , every time when the new roads are laid , they are over laid on the old road, without milling the old one. Consequently nearly 50% of the basement of houses in Tuticorin are below the road level and during rainy season the rain water enters in causing havoc for the dwellers. Why the Corporations is not considering laying new roads after milling the old layer . This will also reduce the cost of laying as most of the raw materials can be recycled. Let us hope the Corporation will follow this at least to bring down the cost of road laying.

KalirajNov 20, 2020 - 07:13:41 AM | Posted IP 108.1*****

Sir thoothukudi 5 family malai thaneyala patheka padullanar Edam..jothi nager Sanraperi ple sir help ne sir

அன்பு அவர்களுக்குNov 19, 2020 - 09:24:48 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி யின் சாக்கடை நீர்கள் சிறப்பாக ஊருக்குள் ஓடி கொண்டிருக்கிறது

MASSNov 19, 2020 - 02:44:48 PM | Posted IP 108.1*****

SUPER

அன்புNov 19, 2020 - 02:27:03 PM | Posted IP 108.1*****

மாநகராட்சி செயல்பாடு சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது...

மாநகராட்சி வேஸ்ட்Nov 19, 2020 - 12:32:36 PM | Posted IP 162.1*****

பாதாள சாக்கடை தான் மிகப்பெரிய தலைவலி, ஊரெல்லாம் நாறடிக்குது, கொசுக்கள் 2 மடங்கு உற்பத்தி ஆவதற்கு தேங்கி இருக்கும் பாதாள சாக்கடை தான் காரணம் , எனவே பாதாள சாக்கடையை சரியாக அமைக்காத மாநகராட்சி மீது வழக்குப்பதிவு செய்யுங்கள்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory