» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி

வியாழன் 19, நவம்பர் 2020 3:23:30 PM (IST)

ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை. இவர் மறைந்த அமைச்சர் ஆலடி அருணாவின் மகள். கடந்த 2006-11 திமுக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்து வந்தவர். இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சற்று நேரத்தில் இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைத் தளங்களில் செய்தி பகிரப்பட்டது. இதுகுறித்து டாக்டர் பூங்கோதை தரப்பில் கேட்டபோது, இது வழக்கமான பரிசோதனைதான். கட்சியிலுள்ள சிலர்தான்தான் இதுபோன்று அவதூறு பரப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory