» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆள்மாறாட்டம் செய்து மோசடி: 2½ ஏக்கர் நிலம் மீட்பு!

வியாழன் 19, நவம்பர் 2020 3:56:13 PM (IST)புதியம்புத்தூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் மூலம் மோசடி செய்யப்பட்ட 2½  ஏக்கர் நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் எஸ்பி ஜெயக்குமார் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம்,  எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி, நியூகாலனி கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த அய்யம் பெருமாள் மகன் ஆறுமுகவேல் (73) என்பவருக்கு ஓட்டப்பிடாரம் தாலுகா, மேல அரசடி கிராமத்தில் முதாதையர்களுக்கு பாத்தியப்பட்ட  2½ ஏக்கர் சொத்தை  9பேர் கொண்ட கும்பல் கூட்டுச்சதி செய்து தாங்கள்தான் ஆறுமுகவேல் என ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் பதிவு செய்து சொத்தை அபகரித்துக்கொண்டனர். இது சம்மந்தமாக ஆறுமுகவேல் கடந்த 16.05.2017 அன்று கொடுத்த புகாரின்பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

நீண்ட நாட்களாகியும் எவ்வித பலனும் இல்லாததால் மேற்படி ஆறுமுகவேல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமாரரை நேரில் சந்தித்து, தன்னுடைய சொத்தை மீட்டுத்தருமாறு புகார் கொடுத்தார். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆறுமுகவேலின் வழக்கு கோப்பை ஆய்வு செய்து, அந்த வழக்கின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மற்றும் புதியம்புத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையில் புதியம்புத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விரைந்து துரித நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்திற்குள் போலி பத்திரம் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து ஆறுமுகவேலின் சொத்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 2½ ஏக்கர் சொத்து பத்திரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சொத்தின் உரிமையாளரான ஆறுமுகவேல் அவர்களிடம் ஒப்படைத்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Nov 20, 2020 - 12:33:14 PM | Posted IP 162.1*****

அந்த 9 பேர் கொண்ட கும்பல் யாரு , தயவு செய்து படத்தை வெளியிடவும் , பொதுமக்களுக்கு தெரியும்படியாக இருக்கும்

மக்கள்Nov 19, 2020 - 09:23:03 PM | Posted IP 162.1*****

அந்த கும்பலை சுட்டு தள்ளுங்க

karuppanNov 19, 2020 - 04:24:37 PM | Posted IP 108.1*****

Very nice to see top level police officials sincerity.

ராமநாதபூபதிNov 19, 2020 - 04:14:30 PM | Posted IP 108.1*****

அந்த 9 பேர் கொண்ட கும்பலை என்ன செஞ்சீங்க யுவர் ஆனர். இதே மாதிரி ஊருக்குள்ள நிறைய புரோக்கர் கூட்டணி போட்டு சுத்திகிட்டு இருக்கானுவ. உங்களுக்கே தெரியாம எஸ் பி ஆபீஸ் இருக்கும் இடத்தை வித்திருவானுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory