» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு: தாசில்தார் ஆய்வு

வியாழன் 19, நவம்பர் 2020 5:43:35 PM (IST)கோம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தாசில்தார் ஆனந்த் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரிஅருகேயுள்ள கோம்பையாற்றில் தொடர் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து கோம்பையாற்று பகுதிக்கு சிவகிரி தாசில்தார் ஆனந்த் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர் மழையால் சிவகிரி ராசிங்கப்பேரி குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதனால் இக்குளத்தின் கீழ் உள்ள சின்னாடப்பேரி, பெரியாடப் பேரி. கோனார் குளம், வழிவிழிக்குளம், பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory