» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் மறியல்

சனி 21, நவம்பர் 2020 10:34:12 AM (IST)திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து  கடையநல்லூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.துரை தலைமை வகித்தார்.   போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம் துரை, மாவட்ட துணை செயலாளர் பேபி ரஜப்பாத்திமா, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ரசாக், மாநில மாணவரணிதுணை செயலாளர் செரீப்,  நகர செயலாளர்கள்  சேகனா, புளியங்குடி ராஜகாந்த், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, ரவிசங்கர், 

மாவட்ட அணி  அமைப்பாளர்கள் இளைஞரணி ஆறுமுகச்சாமி, மாணவரணி வக்கீல்  வெங்கடேசன், மீனவர் அணி ஜபருல்லாகான், தகவல் தொழில்நுட்ப அணி சிவக்குமார்,துணை அமைப்பாளர்கள் முத்துவேல், ஹக்கீம், அழகு தமிழ் சங்கர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, மாவட்ட தலைவர் ஈஸ்வரன், துணைப் பொருளாளர் கருத்தபாண்டி, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட 80 பேரை இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான  போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory