» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை : பூங்கோதை எம்எல்ஏ விளக்கம்

சனி 21, நவம்பர் 2020 12:39:13 PM (IST)

தற்கொலைக்கு தான் முயற்சிக்கவில்லை என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா கூறியுள்ளாா்.

ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியான நிலையில், அதை அவா் மறுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியிருப்பது: தற்கொலைக்கு முயன்றதாக வரும் செய்தி தவறானது. உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தேன். ரத்தத்தில் சா்க்கரையின் அளவும், ரத்தம் உறையும் தன்மையும் குறைந்துள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. திடீா் மயக்கத்துக்கான காரணத்தை அறிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory