» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமண ஆசைகாட்டி 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

சனி 21, நவம்பர் 2020 5:23:18 PM (IST)

மார்த்தாண்டம் அருகே திருமண ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மார்த்தாண்டம் அருகே மருதம்பாறை பச்சக்காவு பகுதியை சேர்ந்தவர் ஜான் பெனட் (22), என்ஜினீயரான இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜான்பெனட் தினமும் வேலைக்கு செல்லும் பஸ்சில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியும் சென்றுள்ளார்.  அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி பேசி வந்தனர். தற்போது, அந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் ஜான்பெனட் மாணவியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உதவியாக மாணவியின் தாயார் உடனிருந்தார். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்து, அங்கு வந்த ஜான்பெனட் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் ஜான்பெனட் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து மாணவி இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து ஜான்பெனட்டை வலைவீசி தேடி வருகிறார். திருமண ஆசைவார்த்தை கூறி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory