» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி : சுரண்டை அருகே பரிதாபம்

திங்கள் 23, நவம்பர் 2020 8:51:16 AM (IST)

சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் திருமலை (13). இவன் சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கருப்பசாமி (17). இவர் சுரண்டை அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையின் மாடியில் ஏறி அருகில் இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறித்து கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற மின்சார ஒயரை 2 பேரும் தொட்டதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். பலத்த காயமடைந்த கருப்பசாமி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் விரைந்து வந்து, பலியான திருமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சுரண்டை அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமத்தை சேர்ந்தவர் பலவேசமுத்து (67). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலையில் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி மையம் அருகில் உள்ள ஒரு வயலில் தொழி அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஒரு வேப்ப மரத்தில் உள்ள கிளைகளை அவர் வெட்டியபோது மரக்கிளை எதிர்பாராத விதமாக மின்சார கம்பியில் விழுந்தது. இதில் எதிர்பாராதவிதமாக பலவேசமுத்து மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜா முகைதீன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பலவேசமுத்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory