» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவர்ளுக்கு அமைச்சர் நிதியுதவி

திங்கள் 23, நவம்பர் 2020 10:27:44 AM (IST)தென்காசி மாவட்டத்தில்  மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவ,மாணவிகள் 10 பேருக்கு தலா  ரூ.1 லட்சம் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில்  மருத்துவ  கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களை போன்று பிற மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிப்பதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி தனது சொந்த தலா ரூ.ஒரு லட்சம்,முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன்  முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி),அ.மனோகரன் (வாசுதேவநல்லூர்)மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory