» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீசார் முன்னிலையில் தீக்குளித்து பெண் தற்கொலை : நெல்லை சுத்தமல்லியில் பரபரப்பு:

செவ்வாய் 24, நவம்பர் 2020 11:40:49 AM (IST)

நெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை சுத்தமல்லி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி சகுந்தலா(45). கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சத்யா தனது 2 மகன்கள், ஒரு மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவரது மூன்றாவது மகன் பிரதீபை ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி சுத்தமல்லி காவலர்கள் நேற்று அழைத்துச் சென்றனர். 

தொடர்ந்து இன்று காலையில் வீட்டுக்கு வந்த காவலர்கள் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வீட்டில் பதுங்கி வைத்திருந்த மடிக்கணினியை பறிமுதல் செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்தனராம். பின்னர் மற்றொரு மகன் பிரசாத்தையும. விசாரணைக்காக  காவலர்கள் அழைத்துச் செல்ல தயாரானபோது, காவலர்கள் தனது குடும்பத்தினரை தேவையில்லாமல் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்துவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். 

பின்னர் சகுந்தலா வீட்டின் கதவை பூட்டி தீக்குளித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுத்தமல்லி காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். 

பின்னர் அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சத்யா நகரை சேர்ந்த பிரதீப் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர்களிடமிருந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். காவலர்கள் விசாரணையை முடித்து புறப்படும்போது சகுந்தலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory