» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் : தென்காசி ஆட்சியர் தகவல்
செவ்வாய் 24, நவம்பர் 2020 5:31:20 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020 - 2021-ம் ஆண்டு ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கரவாகன திட்டத்தின் கீழ் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கரவாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்க அரசு ஆணை எண் 176 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (CGS3) Dept நாள் 04.11.2020 ன்படி வெளியிடப்பட்டது. அதன்படி அம்மா இரு சக்கரவாகனம் மானியம் பெறுவதற்கு வாகன விலையில் 50மூ சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மானியத் தொகை அதிகபட்சமாக ரூ.31,250/- மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்களை கீழ்க்காணும் விபரப்படி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
18 வயது முதல் 45 வயதுடைய மகளிர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.ஆண்டு வருமானம் ரூ. 2,50,000/- க்குள் இருக்க வேண்டும்.ஆதரவற்ற மகளிர், விதவைகள், முதிர்கன்னிகள், மாற்று பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
சான்றிதழ்கள்:
வயது சான்றிதழ்
புகைப்படம் (Pass Port size Photo)
இருப்பிடச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது)
இரு சக்கரவாகன ஓட்டுனர் உரிமம் /LLR
வருமான சான்று (தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறை தலைவர் /சுய சான்று)
வேலை பார்ப்பதற்கான பணி சான்று, தொடர்புடைய நிறுவன துறை தலைவரால் வழங்கப்பட்ட ஊதிய சான்று.
தினக் கூலி அடிப்படையில் பணிபுரிபவராக இருந்தால் Society-யில் இருந்து சான்று.
ஆதார் கார்டு
முன்னுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.
சாதி சான்று (SC & ST only),
மாற்றுத்திறனாளியெனில் தேசிய அடையாள அட்டை.
இருசக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி
இலக்கில் 2.5 மடங்கு அளவிலான விண்ணப்பங்கள் வரப்பெறும் வரை. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி : வட்டார வளர்ச்சி அலுவலகம் (கி.ஊ)/செயல் அலுவலர் அலுவலகம் (பேரூராட்சி)/ ஆணையாளர் அலுவலகம் (நகராட்சி)
இட ஒதுக்கீடு விவரங்கள்: ஆதிதிராவிடர் 21%, பழங்குடியினர் 1%
மாற்றுத்திறனாளி 4% (ஊனமுற்றோர் விகிதம்) இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரான் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
