» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் இன்று 10பேருக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 8,032 ஆக உயர்வு!

வியாழன் 26, நவம்பர் 2020 7:57:50 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று 10 பேர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,032 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கு இதுவரை 27,085 பேர்கள் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையத்தில் ஒருவர் உள்ளார். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1,35,668 பேர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 718 பேர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 21 பேர்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டனர்.

இன்று 10 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் மூவரும், தென்காசியில் மூவரும், கடையநல்லூரில் மூவரும், ஆலங்குளத்தில் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர் .தென்காசி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,032 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 7,796 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2 பேர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 82 பேர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory