» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சட்டவிரோதமாக கஞ்சா, மது விற்பனை : 2பேர் கைது
செவ்வாய் 1, டிசம்பர் 2020 5:14:44 PM (IST)
சிவகிரி அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது அப்பகுதியைச்சேர்ந்த கருப்பையா மகன் பேச்சியப்பன் (34) என்பவர் பைக்கில் மதுபாட்டில்களை வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல்செய்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
சிவகிரியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
சிவகிரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அவர் சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரை பிடித்து விசாரணை செய்தார்.விசாரணையில் அந்நபர் சிவகிரி மெயின் ரோட்டைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாடசாமி (25) என்றும், அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனை செய்ததும்தெரிய வந்தது. இதனையடுத்து மாடசாமியை கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்செய்யப்பட்டது.இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு கடன் சங்க காவலாளி தற்கொலை
வெள்ளி 15, ஜனவரி 2021 5:38:38 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
புதன் 13, ஜனவரி 2021 12:31:13 PM (IST)

பைக்கில் வந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
புதன் 13, ஜனவரி 2021 11:55:44 AM (IST)

அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:35:38 AM (IST)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்ததார் - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
செவ்வாய் 12, ஜனவரி 2021 8:47:38 AM (IST)
