» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புயல் எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு குழு நெல்லை வருகை

செவ்வாய் 1, டிசம்பர் 2020 5:20:42 PM (IST)புயல் எச்சரிக்கை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை வந்துள்ளனர்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் அதீத கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு  சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்   தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் வைத்திலிங்கம் தலைமையில் 60 பேர்  வந்துள்ளனர் 

இதைத் தொடர்ந்து துணை கமாண்டர் வைத்தியலிங்கம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணுவுடன்  ஆலோசனை நடத்தினார். பின்னர் 60 பேரும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதி மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் உள்ளனர்.

இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் துணை கமாண்டர் வைத்தியலிங்கம் கூறும்போது நெல்லை மாவட்டத்திற்கு 60 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழு வந்துள்ளதாகவும், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு  தயார் நிலையில்  இருப்பதாகவும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில்  இருந்து பொதுமக்களை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து கருவிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும்  தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory