» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புயல் எச்சரிக்கை தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை : போலீஸ் பாதுகாப்பு

புதன் 2, டிசம்பர் 2020 4:57:23 PM (IST)

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் அடுத்த 3 நாட்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரைகளில் பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.

புரெவி புயல் தமிழகத்தின் பாம்பன் மற்றும் குமரி கடல் பகுதிக்கு இடையே கரையை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது இதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் தயார் செய்யும் பணி பேரிடர் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகள் போன்றவை செய்யப்பட்டு வருகிறது 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வரை பயணிக்கும் தாமிரபரணி நதியில் அதி கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்வள அமைச்சகம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது இதன் காரணமாக புரெவி புயல் மற்றும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி நதிக்கரையில் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் குளிப்பதற்கும் ஆற்றங்கரையை வேடிக்கை பார்ப்பதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவைப் பிறப்பித்திருந்தார் 

இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஆற்றங்கரை படித்துறைகளில் எச்சரிக்கை பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு ஆற்றின் வெள்ளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கனமழை பெய்யத் தொடங்கும் நிலையில் தாமிரபரணி நதிக்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் ஆற்றங்கரை பகுதியில் இருக்கும் பொது மக்களிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory