» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றால அருவிகளில் தடையை நீக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: அமைச்சர்
வெள்ளி 4, டிசம்பர் 2020 10:33:28 AM (IST)

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தென்காசியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புரெவி புயல் முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சுகுணாசிங், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டம் முடிந்தவுடன் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- புரெவி புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழு இழந்த காரணத்தினால் மழை பொழிவு மட்டுமே இருக்கக்கூடும்.குறைந்த அளவிலேயே காற்று வீசக்கூடும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ; தமிழகத்தில் கொரோனா தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றால அருவிகளுக்கான தடை உத்தரவை நீக்குவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சொல்லப்படும் .
இந்த ஆண்டு வடகிழக்கு பருமழை 28.10.2020 அன்று தொடங்கி மாநில முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதில் தற்போது நிவர் புயலை கடந்து புரெவி புயலை எதிர் கொண்டு இருக்கிறோம். சென்னை,திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழை பெய்து உள்ளது. கடலூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ,திருப்பூர்,திருவள்ளுர் திருவண்ணாமலை, தூத்துக்குடி,இராணிபேட்டை,வேலூர் விழுப்புரம் மற்றும் கள்ளகுறிச்சி ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்து உள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான மழை பெய்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 16144 பாசன ஏரிகளில் 2692 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ள அளவை எட்டிருக்கிறது. அதனை 100 சதவீதம் தனியாக அலுவலர்கள் நியமிக்கபட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. தென் மாவட்டங்களானமதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி ,விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி,தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7605 ஏரிகளில் 979 ஏரிகள் முழு கொள்ள அளவை எட்டியிருக்கிறது.
தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய கூடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 490 முகாம்களில் 2 இலட்சம் பேர் தங்க வைக்க கூடிய வசதி ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, ; மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.
குடிசை வீடு, ஓட்டு வீடு மற்றும் பழுதடைந்த வீட்டில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி; அறிவுறுத்தளின்படி கடற்கறையோர மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்;. பேரிடர் நேரத்தில் அனைத்து துறைகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்டஅதிமுக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி , மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, திட்ட இயக்குநர் சரவணன், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி, தாட்கோ வங்கி மாநில துணை தலைவர் குற்றாலம் சேகர், மாவட்ட நெசவாளர் சங்கதலைவர் ஆறுமுகம், மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர் சண்முகசுந்தரம், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு கடன் சங்க காவலாளி தற்கொலை
வெள்ளி 15, ஜனவரி 2021 5:38:38 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
புதன் 13, ஜனவரி 2021 12:31:13 PM (IST)

பைக்கில் வந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
புதன் 13, ஜனவரி 2021 11:55:44 AM (IST)

அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:35:38 AM (IST)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்ததார் - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
செவ்வாய் 12, ஜனவரி 2021 8:47:38 AM (IST)
