» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் தொடர் மழை: வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம்

வெள்ளி 4, டிசம்பர் 2020 5:05:57 PM (IST)



பாளையங்கோட்டையில் தொடர் மழையினால் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் படுகாயம் அடைந்தார். 

புரெவி புயல் காரணமாக தென் தமிழகத்தில் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக புயலின் தாக்கத்தினால் சாரல்மழை  விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள நிலப்பகுதி அனைத்தும் ஈரப்பதத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் பாளையங்கோட்டை மாசிலாமணி தெருவைச் சேர்ந்த இருதயராஜ் (74) என்பவரது வீட்டின் மேற்கூரை தொடர்ந்து பெய்த சாரல் மழை காரணமாக ஈரப்பதம் ஏற்பட்டு வலுவிழந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்தது. 

இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருதயராஜ் மீது கட்டிடத்தின் மேற்கூரை  விழுந்து உள்ளது. அதிக சத்தம் கேட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து இருதயராஜை இடிபாடுகளிலிருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வீடு இடிந்து விழுந்தது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் வருவாய்த் துறையினரும் ஆய்வு செய்தனர். இந்த வீட்டில் இருதயராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். பால் வாங்க இருதயராஜின் மனைவி சென்றதால் அவர் காயங்களின்றி தப்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory