» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 14, டிசம்பர் 2020 3:58:15 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு நாளை(டிச.15) முதல் அனுமதி வழங்கப் படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் பொது மக்கள் பயன் பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் அரசாணை எண். 723 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை. நாள். 07.12.2020ன் படி தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலாதலங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக15.12.2020 முதல்; காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கப்படும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி அருவிகளில் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிருவாகம் சார்பில் ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்து அக்குழுவின் முடிவின் படி ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அதன் அடிப்படையில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுற்றுலாதலங்களுக்கு செல்லும் போது தவறாது முகக்கவசம் பயன் படுத்த வேண்டும். மேலும் சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரமும், பாதுகாப்பும் முதன்மையானது என்பதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து அருவிகளுக்கு வருவதையும், அருவிகளில் இருந்து நோய்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

ஒரு முறை பயன்படுத்தபட்ட தட்டு, டம்ளர், தண்ணீர்பாட்டில், உள்ளிட்ட அனைத்தையும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும், எப்பொழுதும் சமூக இடைவெளியை பின்பற்றவும், தனியார் விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகள் கதவுகளை அடைத்து வைத்திருக்கவும், அருவிப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தவறாது கிருமிநாசினி பயன்படுத்தவும், கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அருவிகள் மற்றும் இதர சுற்றுலா இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிருவாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றிட தென்காசி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory