» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் 9 மாதங்களுக்கு பின் அனுமதி: பொதுமக்கள் உற்சாக குளியல்!!
செவ்வாய் 15, டிசம்பர் 2020 11:52:19 AM (IST)

குற்றாலம் அருவிகளில் 9 மாதங்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் பொது மக்கள் பயன் பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலாதலங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று 15.12.2020 முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அருவிகளில் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிருவாகம் சார்பில் ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்து அக்குழுவின் முடிவின் படி ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அதன் அடிப்படையில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுற்றுலாதலங்களுக்கு செல்லும் போது தவறாது முகக்கவசம் பயன் படுத்த வேண்டும். மேலும் சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரமும், பாதுகாப்பும் முதன்மையானது என்பதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும், ஒரு முறை பயன்படுத்தபட்ட தட்டு, டம்ளர், தண்ணீர்பாட்டில் உள்ளிட்ட அனைத்தையும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அருவிகள் மற்றும் இதர சுற்றுலா இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிருவாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றிட தென்காசி கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று காலை 6 மணிக்கு குற்றாலம் மெயின் அருவியில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமகள்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அருவி பகுதியில் கூட்டம் கூட போலீசார் அனுமதிக்கவிக்கவில்லை.பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் போலீசார் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
