» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

திங்கள் 21, டிசம்பர் 2020 10:23:21 AM (IST)குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுகிறது. இதனால் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனைத்து அருவிகளிலும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவலால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15.12.2020 முதல் அனைத்து அருவிகளிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் மெயினருவியில வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க கடந்த 2 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் வேகம் குறைந்ததால் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவும் சற்று குறைந்துள்ளது. 

எனவே நேற்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திரளாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதாலும், தற்போது ஜய்யப்ப சீசன் நடைபெற்று வருவதாலும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், ஐய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. 

இதனால் நேற்று குற்றாலத்தில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இன்று கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் சுகாதார பணியாளர்கள், குற்றாலம் பேரூராட்சி பணியாளர்கள், ஆகியோரும் பழைய குற்றாலம் பகுதியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ,ஆயிரப்பேரி ஊராட்சி பணியாளர்கள் பலர் சுற்றுலா பயணிகள் அரசு விதிமறைகளை கடைபிடித்து அருவிகளில் குளிப்பதற்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory