» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்: 1000 கோழிப் பண்ணைகளில் திடீர் ஆய்வு
வியாழன் 7, ஜனவரி 2021 5:00:53 PM (IST)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்னைகளில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரள எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் தென்காசி மாவட்ட எல்லையான புளியறை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பவர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழித் தீவனங்கள், கோழி இறைச்சிகள் மற்றும் கோழிக்கழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக திருப்பி அனுப்பப்படுகிறது. மற்ற வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னர் நீண்ட சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இன்று 2-வது நாளாக சுகாதார துறையினர் மற்றும் கால்நடை மருத்துவதுறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை கால்நடைதுறையினர் தீவிரபடுத்தி உள்ளனர். மண்டல இணை இயக்குநர் முகமது காலித் தலைமையில் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நோய் மனிதர்களையும் தாக்கும் என்பதால் அது குறித்து சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்னைகளில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது நோய் பாதித்த கோழிகள் குறித்து கால்நடை துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கால்நடைதுறை அதிகாரிகள் கூறும்போது, பறவைக் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பறவை காய்ச்சல் கண்ட கோழிகளுக்கு மூக்கில் நீர் ஒழுகும், மேலும் நோய் கண்ட கோழிகள் கூட்டம் கூட்டமாக இறந்து போகும். அவ்வாறு காணப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் கோழி இறைச்சி, முட்டைகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பாதி வேக வைத்த நிலையிலும், பச்சை முட்டை, ஆப்பாயில் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கோழிகளை வீட்டுக்குள்ளேயே பாதுகாக்க வேண்டும். வெளியில் விடக்கூடாது. அவற்றிற்கு வைக்கும் தீவனம், தண்ணீரை சுத்தமாக கொடுக்க வேண்டும் என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு கடன் சங்க காவலாளி தற்கொலை
வெள்ளி 15, ஜனவரி 2021 5:38:38 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
புதன் 13, ஜனவரி 2021 12:31:13 PM (IST)

பைக்கில் வந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
புதன் 13, ஜனவரி 2021 11:55:44 AM (IST)

அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:35:38 AM (IST)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்ததார் - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
செவ்வாய் 12, ஜனவரி 2021 8:47:38 AM (IST)
