» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
லோடு ஆட்டோவில் கடத்திய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது
வெள்ளி 8, ஜனவரி 2021 9:03:42 AM (IST)
கங்கைகொண்டானில் 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
கயத்தாறு அருகே உள்ள கங்ைககொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோபனா ஜென்சி மற்றும் போலீசார் நேற்று மதியம் ராஜபதி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த லோடு ஆட்டோவில் மூட்டைகளில் சுமார் 3 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த வினோத் (40) என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில், கங்கைகொண்டான்-மறக்குடி ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுெதாடர்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மன்சூர் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த மொத்தம் 5 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் மூலம் நெல்லை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு கடன் சங்க காவலாளி தற்கொலை
வெள்ளி 15, ஜனவரி 2021 5:38:38 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
புதன் 13, ஜனவரி 2021 12:31:13 PM (IST)

பைக்கில் வந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
புதன் 13, ஜனவரி 2021 11:55:44 AM (IST)

அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:35:38 AM (IST)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்ததார் - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
செவ்வாய் 12, ஜனவரி 2021 8:47:38 AM (IST)