» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வெள்ளி 8, ஜனவரி 2021 3:50:25 PM (IST)

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (08.01.2021) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் மூலம் கோவிட்-19 தடுப்பூசி முகாம் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழக அரசு மற்றும் சுகாதார துறையின் ஆணைப்படி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் மூலம்; கோவிட் 19 தடுப்பூசி முகாம் ஒத்திகை நிகழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை, தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தென்காசி சாந்தி மருத்துவமனை ஆகிய இடங்களில் அனைவருக்கும் எவ்வாறு தடுப்பூசிகளை பயன்படுத்தி எளிய முறையில் மக்களுக்கு உபயோக படுத்தலாம் என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
COWIN செயலியில் பதிவு செய்த நபர்கள் மற்றும் சுகாதாரபணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தி அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தடுப்பூசி திட்டத்திற்கும் கள சூழலில் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து பாதகமான நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்வுற்றால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும். இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி, இணை இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இந்த தடுப்பூசி பணியில் தடுப்பூசி செலுத்துபவர் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தடுப்பூசி திட்ட பணி ஒத்திகைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் COWIN செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைப்பேசிக்கு COWIN செயலியின் மூலம் குறுந்தகவல் சென்றடையும். மேலும், அவர்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் COWIN செயலியின் மூலம் பெறுவர்.
இதனை தொடர்ந்து நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களும் மற்றும் நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவருக்கும் கோவிட்-19 க்கான தடுப்பூசி விரைவில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் கேட்டறிந்தார்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கலுசிவலிங்கம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், அரசுதலைமை மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
