» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேருந்து நிறுத்தம் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

வெள்ளி 8, ஜனவரி 2021 8:59:37 PM (IST)


கடையநல்லூர் மருத்துவமனை பேருந்து நிலையத்தில் அரசு பஸ் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் தெரு காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி வடிவு (42). இவர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் இருந்து கசியும் தண்ணீரை பிடிப்பதற்காக சென்றார். அவர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகில் சாலையை கடந்தபோது, மதுரையில் இருந்து பாபநாசம் நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவு பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம்   குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வடிவுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory