» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது: உபரி நீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!!

சனி 9, ஜனவரி 2021 12:10:21 PM (IST)

நெல்லை மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் பிரதானமான அணையாகும். இதில் மணிமுத்தாறு அணை 118 அடி உயரம் மற்றும் 5,511 மில்லியன் கன அடி கொள்ளளவுடன் மாவட்டத்தின் பெரிய அணையாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அதிக நீர் வரத்து இருக்கும். ஆனாலும் ஆண்டு தோறும் மணிமுத்தாறு அணை நிரம்புவது கிடையாது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. 

சனிக்கிழமை காலை அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.  இதையடுத்து அணையிலிருந்து 80 அடி கால்வாயில் 400 கன அடியும் மேல் மதகு மூலம் 200 கன அடியும் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.  4 ஆண்டுகளுக்குப் பின் மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து பொதுமக்கள் அணையை கண்டுகளித்து வருகின்றனர். 

மேலும் வடகிழக்குப் பருவ மழை ஜனவரி மாதத்திலும் தொடர்வதாலும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் வேகமாக நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.15 அடியும் அணைக்கு நீர்வரத்து 2061.97 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1942.29 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 144.26 அடியாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory