» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை : ஆட்சியர் தகவல்
சனி 9, ஜனவரி 2021 12:13:00 PM (IST)
வீரகேரளம்புதூர் மற்றும் கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்குகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "2020-21ஆம் ஆண்டிற்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எனினும் வீரகேரளம்புதூர் மற்றும் கடையநல்லூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பற்ற வைப்பவர் , பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.
எனவே இந்த 2 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 16.01.2021 வரை நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. எனவே மாணவர்கள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களை உடனடியாக அணுகி காலியாக உள்ள தொழிற்பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, இரண்டு செட் சீருடைகள் மற்றும் தையற் கூலி, புத்தகங்கள் மற்றும் சேப்டி ஷீ ஆகியன வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 04633 277962 என்ற தொலைபேசி எண்ணிலும் 7708467041, 9994416525 என்கிற செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
