» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியி்ல் ஜன.14-ல் கிராமியக் கலைப் பயிற்சி

ஞாயிறு 10, ஜனவரி 2021 9:44:22 AM (IST)

தூத்துக்குடியி்ல் வருகிற 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று தமிழன்டா கலைக்கூடம் சார்பில் கிராமியக் கலைப் பயிற்சி நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் வரும் தை பொங்கல் தினத்தன்று, 14ஆம் தேதி தமிழன்டா கலைக்கூடம் நடத்தும் தமிழ் கிராமியக்கலைப் பயிற்சி நடைபெற இருக்கிறது. தூத்துக்குடி சிதம்பர நகர் சந்தை வளாகத்தில் உள்ள தமிழன்டா கலைக்கூடத்தில் காலை 7 மணிக்கு தாரை தப்பட்டை முழங்கத்துடன் விழா தொடங்குகிறது. இதில், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம்,கோலாட்டம், களியலாட்டம், வீதி நாடகப் பயிற்சி, கரகம், காவடி போன்ற கிராமியக் கலைகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிலம்பு செல்வம், மேகலிங்கம் போன்றோர் பயிற்சி வழங்குகின்றனர். மாரி பறையாட்டம் கற்றுக்கொடுக்கிறார். சிலம்பம் கலையை மாரியப்பன், யோகா கலையை சுந்தரவேல், பாரம்பரிய கலையை பாக்ஸர் லெட்சுமண மூர்த்தி போன்ற பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். அனைத்து பயிற்சிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பதிவு அவசியம். இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள கலைஞர்கள் – பயிற்சியாளர்கள் "தமிழன்டா கலைக்கூடம், 97917 80068, 98650 97664 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

kumarJan 10, 2021 - 06:52:24 PM | Posted IP 173.2*****

pongal andru kulanthaigal pongal vaithu sooriyanai valipaduvargala? ungalidam payirchi edukka varuvargala? veru thethiyil nadatha muyarchipannungal...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory