» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொடா் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திங்கள் 11, ஜனவரி 2021 11:16:53 AM (IST)

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழைப் பொழிவு இருப்பதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் பெரிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து சனிக்கிழமை காலை உபரிநீா் திறந்துவிடப்பட்டது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததையடுத்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உபரிநீா் திறந்துவிடப்பட்டது.
மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிலிருந்து சுமாா் 4 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளான கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாா்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி படித்துறைகளை வெள்ளம் மூழ்கடித்தது. தண்ணீா் வரத்து அதிகமாக உள்ளதையடுத்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடா் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 2-ஆவது நாளாக நேற்று மிதமான மழை பெய்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, மேலப்பாளையம், தச்சநல்லூா் பகுதிகளில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.
தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் உபரி நீா் திறந்துவிடப்படுவதால், தாமிரபரணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியநிலையில், உபரி நீா் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
எனவே, ஆற்றில் நீா்வரத்து அதிகளவில் உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்கவோ, புகைப்படம் மற்றும் சுயபடம் எடுக்கவோ செல்லவேண்டாம். அதே போன்று, ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
